விருதுநகர் அருகே சுமார் 500 ஆண்டுகளை கடந்த பழமையான சிவன் கோயிலை உடனடியாக மறு சீரமைக்க கோரி கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடிந்த நிலையில் சிவன் கோயில்:-
திருச்சுழி தொகுதிக்கு உட்பட்ட நரிக்குடி யூனியன் இருஞ்சிறை கிராமத்தில் அமைந்துள்ளது மிகவும் பழமையான சிவன் கோயில். இக்கோயில் சுமார் 500 ஆண்டுகளை கடந்தது. பாண்டியர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும். கோயில் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினால் கருங்கற்களால் கட்டப்பட்ட கோவில் உள் பிரகாரம் மற்றும் கோபுரங்கள், சுற்றுப்புற சுவர்கள் இடிந்து சேதமடைந்து காணப்படுகின்றன.
கோயில் முழுவதும் முட்செடிகள் ஆக்கிரமித்து காணப்படுவதால் பழங்காலக் கோயில் தனது பாரம்பரிய பெருமைகளை இழந்து காட்சி அளிக்கிறது. கோயிலில் உள்ள சிவலிங்கத்திற்கு மட்டும் கிராம மக்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பிரதோஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபாடு நடத்தி வருகின்றனர்.
கோயிலை மறு சீரமைக்க கோரிக்கை:-
பழங்காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயிலை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக மறுசீரமைப்பு செய்து குடமுழுக்கு விழா நடத்தப்பட வேண்டும் என கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.