விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், பக்தர்களின் காணிக்கையாக ரூ.55 லட்சம் கிடைத்தது.
10 நிரந்தர உண்டியல்கள் திறப்பு:-
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலும் முக்கியமான ஒன்றாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெறுவது வழக்கம். வழக்கம்போல இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
ரூ.55 லட்சம் உண்டியல் காணிக்கை:-
இங்குள்ள 10 நிரந்தர உண்டியல், ஒரு கால் நடை உண்டியல் திறக்கப்பட்டு பொருட்கள் கணக்கீடு செய்யப்பட்டது. அதில் ரொக்கமாக 55 லட்சத்தி 62 ஆயிரத்தி 385 ரூபாய் பக்தர்களின் காணிக்கையாக கிடைத்தது. தங்கம் 209 கிராம்; வௌ்ளி 1,046 கிராம் காணிக்கையாக கிடைத்தது.
உண்டியல் எண்ணும் பணியில் பக்தர்கள் குழு:-
சாத்தூர், துலுக்கபட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு மற்றும் ஐயப்ப சேவா சங்கம், கோயில் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். விருதுநகர் கோயில்களின் இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் வளர்மதி, இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன் தலைமையில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழுவினர், கோவில் ஆய்வாளர்கள், உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.