Home /local-news /

விருதுநகர்:கணவர் கவுன்சிலர், மனைவி நகர்மன்ற தலைவர்-அசத்திய தம்பதியர்

விருதுநகர்:கணவர் கவுன்சிலர், மனைவி நகர்மன்ற தலைவர்-அசத்திய தம்பதியர்

விருதுநகர்:கணவர் கவுன்சிலர், மனைவி நகர்மன்ற தலைவர்-அசத்திய தம்பதியர்

விருதுநகர்:கணவர் கவுன்சிலர், மனைவி நகர்மன்ற தலைவர்-அசத்திய தம்பதியர்

ராஜபாளையம் நகர்மன்றத்தில் முதன்முறையாக தேர்தலில் நின்று திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பவித்ரா ஷ்யாம் ராஜா நகராட்சித் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். 

    ராஜபாளையம் நகர்மன்ற  தேர்தலில் முதன்முறையாக  திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பவித்ரா ஷ்யாம் ராஜா நகராட்சித் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளர் ஷ்யாம் ராஜா 41-வது வார்டிலும், மனைவி பவித்ரா ஷ்யாம் ராஜா திமுக சார்பில் 6-வது வார்டிலும் போட்டியிட்டு இருவரும் வெற்றிபெற்றுள்ளார்.

    ராஜபாளையம் ஏ.ஏ.சுப்பராஜா, 1967 முதல் 2011 வரை தொடர்ச்சியாக ஆறுமுறை ராஜபாளையம் நகர்மன்றத் தலைவராக பதவி வகித்து வந்தவர். காங்கிரஸ், சுயேட்சை, நகர்நல முன்னணி சார்பாக வெற்றி பெற்று தலைவர் பதவி வகித்து வந்தவர்.
    இவரது மகன் ஏஏஎஸ் ஷ்யாம் ராஜா, 52 வயது. இவர் பிஎஸ்சி வேதியியல் படித்துள்ளார். தந்தை கவனித்து வந்த ஏலக்காய் தோட்டம் மற்றும் விவசாயத்தை தற்போது ஷ்யாம் ராஜா பார்த்து வருகிறார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 41-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு தற்போது வெற்றி பெற்றுள்ளார்.

    ஏ.ஏ.ஷ்யாம் ராஜாவின் மனைவி பவித்ரா ஷ்யாம் ராஜா, 37 வயது. இவர் 6 -வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் பிஎஸ்சி வேதியியல் முதலாம் ஆண்டு வரை படித்தவர். இவர் முதன் முறையாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

    மேலும் திமுக சார்பில் ராஜபாளையம் நகர்மன்றத்தின் முதலாவது திமுக நகர்மன்றத் தலைவராக பவித்ரா பதவி ஏற்க உள்ளார்.இருவருமே திமுக சார்பில் வெற்றி பெற்று சாதனை படைத்த தம்பதி என்பது குறிப்பிடத்தக்கது.


    செய்தியாளர்: அ.மணிகண்டன், விருதுநகர்
    Published by:Alagesan R
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி