விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 2 லட்ச ரூபாய் வாடகை பாக்கி செலுத்தாத உணவகத்திற்கு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில்பத்திற்கும் மேற்பட்ட கடைகள்செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வரும் தனியார் உணவகம்ரூ 2,00,000 வரை வாடகை பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை உணவக உரிமையாளருக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியும் எந்தவித பதிலும் இல்லை. உணவகமும் செயல்படாமல் மூடியே கிடந்தது.
இதனையடுத்து இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் பாஸ்கரன் முன்னிலையில் கோவில் செயல் அலுவலர் தேவி மேற்பார்வையில் அறநிலையத்துறை அதிகாரிகள் வாடகை பாக்கி தராத உணவகத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் இதே போல் பல கடைகள் வாடகை பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் வாடகை பாக்கி செலுத்தவில்லை எனில் வாடகை தராத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.