Home /local-news /

GPS கருவியில் உராய்வு.. தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரியில் தீடீர் தீ விபத்து..

GPS கருவியில் உராய்வு.. தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரியில் தீடீர் தீ விபத்து..

தேசிய நெடுஞ்சாலையில் சென்ற  லாரியில் தீடீர் தீ விபத்து-போலீஸ் விசாரணை

தேசிய நெடுஞ்சாலையில் சென்ற  லாரியில் தீடீர் தீ விபத்து-போலீஸ் விசாரணை

Virudhunagar District | விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியில் GPS கருவியில் ஏற்பட்ட மின் உராய்வு காரணமாக தீடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து ப

மேலும் படிக்கவும் ...
    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியில் GPS கருவியில் ஏற்பட்ட மின் உராய்வு காரணமாக திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜன் தனியார் டேங்கர் லாரி சர்விஸ் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள தனியார் பெயிண்ட் ஆலைக்கு சொந்தமான டேங்கர் லாரியை ஒப்பந்த அடிப்படையில் இயக்கி வருகிறார்.

    இந்நிலையில் ஒசூரில் இயங்கி வரும் டேங்கர் லாரியை கோவில்பட்டியில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து பராமரிப்பு பணி முடிந்து மீண்டும் ஒசூரில் உள்ள பெண்யிட் ஆலைக்கு கோவில்பட்டி அருகில் உள்ள அய்யநேரி பகுதியை சேர்ந்த சீத்தாராமன் என்பவர் ஒட்டி சென்று உள்ளார்.

    சீத்தாராமன் ஓட்டி வந்த லாரி சாத்தூர் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது லாரியில் முன்பகுதியில் உள்ள GPS கருவியில் ஏற்பட்ட மின் உராய்வு காரணமாக லாரியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. சாலையில் சென்று கொண்டியிருந்த லாரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து லாரியை ஒட்டி வந்த சீத்தாராமன் லாரியில் இருந்து இறங்கி உடனடியாக தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பாக லாரியின் முன்பகுதி முற்றிலுமாக எரிந்து தேசம் அடைந்தது. இந்நிலையில் லாரியில் மேலும் தீ பரவாமல் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர் .

    இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: அ. மணிகண்டன் விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி