Home /local-news /

விருதுநகர்: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ  தேர்வுகளுக்கு இலவச பயிற்சி - உடனே முந்துங்கள்

விருதுநகர்: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ  தேர்வுகளுக்கு இலவச பயிற்சி - உடனே முந்துங்கள்

விருதுநகர்: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ  தேர்வுகளுக்கு இலவச பயிற்சி..

விருதுநகர்: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ  தேர்வுகளுக்கு இலவச பயிற்சி..

TNPSC Exam Coaching | டிஎன்பிஎஸ்சி குரூப் 2,2 ஏ காலி பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படுவதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார்.

    டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ காலிப் பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படுவதாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார்.

    தற்போது அறிவிக்கப்பட்டுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ காலிப்பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் 10:30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மார்ச் 7ஆம் தேதி முதல் தினசரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி மையத்தில் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். இதில் பங்கேற்போர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின், தன்னார்வ பயிலும் வட்டம் நூலகத்தில் தேர்வுக்கான புத்தகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    tamilnaducareerservices.tn.gov.in ல் காணொலி காட்சி மூலம் கற்பித்தல் பாடக் குறிப்புகள் புத்தகங்கள் மாதிரி வினாக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த இலவச பயிற்சியை பெற விருப்பமுள்ளவர்கள் 9677734590, 9384135550 ஆகிய எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: TNPSC, Virudhunagar

    அடுத்த செய்தி