Home /local-news /

அருப்புக்கோட்டை: பொங்கல் விழாவையொட்டி பூக்கள்  விற்பனை படுஜோர் - வியாபாரிகள் மகிழ்ச்சி

அருப்புக்கோட்டை: பொங்கல் விழாவையொட்டி பூக்கள்  விற்பனை படுஜோர் - வியாபாரிகள் மகிழ்ச்சி

virudhunagar

virudhunagar | பொங்கல் பண்டிகையையொட்டி அருப்புக்கோட்டை பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூபாய் 1,500க்கு விற்பனையானது.

virudhunagar | பொங்கல் பண்டிகையையொட்டி அருப்புக்கோட்டை பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூபாய் 1,500க்கு விற்பனையானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பொங்கல் பண்டிகையையொட்டி அருப்புக்கோட்டை பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூபாய் 1,500க்கு விற்பனையானது. பொதுமக்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் ஆர்வமாக பூக்களை வாங்கி சென்றனர்.


    மல்லிகைப் பூ ரூ. 1,500 க்கு விற்பனை:-

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பூ மார்க்கெட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி பூக்களின் தேவை அதிகரிப்பால் பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூ ரூபாய் 1,500-க்கும், கனகாமரம், செவ்வந்தி, முல்லை ரூபாய் 1,400-க்கும், விற்பனை செய்யப்பட்டது.

    இதேபோல், சம்பங்கி ரூ.130, பன்னீர் ரோஸ் ரூ.200 செவ்வந்தி, கோழிக்கொண்டை ரூ. 100 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. பூக்களின் விலை ஏற்றத்தால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தளர்வு அளிக்க கோரிக்கை:-

    இதுகுறித்து நம்மிடம் பேசிய பூ வியாபாரி இருளன் கூறியதாவது, கடந்த ஆண்டை போல் இல்லாமல் நடப்பாண்டு வியாபாரம் சுமாராக உள்ளது. மேலும், ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் பூக்கள் தேக்கம் அடைந்துள்ளதால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். எனவே, முழு ஊரடங்கில் பூ விற்பனைக்கு சில தளர்வுகளுடன் அனுமதி அளிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Karthick S
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி