2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு
விருதுநகர் மாவட்டத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. விருதை பட்டாளம் படைவீரர்கள் நலச் சங்கம் சார்பில் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார்கள்.
2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி புல்வாமா தாக்குதலில் ஏராளமான ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விருதுநகர் மாவட்ட விருதை பட்டாளம் படைவீரர்கள் நலச் சங்கம் சார்பிலும், நேதாஜி அறக்கட்டளை சமூக சேவை சார்பிலும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே, சத்திரப்பட்டி பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வீரமரணமடைந்த அனைத்து வீரர்களது படங்கள் பொறிக்கப்பட்ட பேனர் வைக்கப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
இதில் முன்னாள் படை வீரர்களும் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது, அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த ராணுவ வீரர் ஒருவரும் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.