விருதுநகர் அருகே குக்கிராம விவசாயிகள் பழமை மாறாமல் விளைந்த நெற்கதிர்களை கதிர் அரிவாள் கொண்டு கைகளால் அறுவடை செய்து கதிர் அடிக்கும் பாரம்பரிய முறையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாரம்பரிய முறைக்கு மாறிய விவசாயிகள்:-
திருச்சுழி தொகுதிக்கு உட்பட்ட அருப்புக்கோட்டை அருகே உள்ள இராமானுஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.வயல்களில் நெற் கதிர்கள் நன்கு முதிர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாரான நிலையில் விவசாயிகள் அறுவடை பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் நெல் அறுவடை இயந்திரம் மூலமாக அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், ராமானுஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பழமை மாறாமல் கதிர் அரிவாள் கொண்டு நெற்கதிர்களை அறுவடை செய்து கைகளால் நெல் கதிரடிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதோடு அழிந்து வரும் பாரம்பரிய நெல் கதிரடிக்கும் முறையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பயிர் காப்பீடு தொகையை வழங்க கோரிக்கை:-
மேலும் அனைத்து விவசாயிகள் பழைய முறையிலான அறுவடை பணியில் ஈடுபட வேண்டும் என இவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அறுவடை செய்த நெல்லுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிப்பதோடு, கடந்தாண்டு வழங்கப்படவேண்டிய பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.