விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானியத்தில் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் கருவி பெற விண்ணப்பிக்கலாம்:-
விருதுநகர் மாவட்டத்தில் விவசாய ஆள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் விவசாயிகளின் நிகர லாபத்தை உயர்த்திட வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சிறு,குறு ஆதிதிராவிடர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியமும் இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட உள்ளன.
இணையதளம் மூலம்
விண்ணப்பிக்கவும்:-
இத்திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியான விவசாயிகள் தங்களது விண்ணப்பத்தினை உழவன் செயலியில் பதிவு செய்து அதன் பின் மத்திய அரசின் இணைய தளமான www.agrimachinery.nic.in மூலமாக பதிவு செய்து பதிவு மூப்பு அடிப்படையில் வேளாண் கருவிகளை மானியத்தில் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.