Home /local-news /

பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் 1008 தேங்காய் உடைத்து நூதன போராட்டம்

பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் 1008 தேங்காய் உடைத்து நூதன போராட்டம்

பெட்ரோல், டீசல், உயர்வை கண்டித்து காங்கிரசார் 1008 தேங்காய் உடைத்து போராட்டம்

பெட்ரோல், டீசல், உயர்வை கண்டித்து காங்கிரசார் 1008 தேங்காய் உடைத்து போராட்டம்

Virudhunagar District | சாத்தூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் காளியம்மன் கோயில் முன்பு 1008 தேங்காய் உடைத்து கண்டன முழக்கங்களை எழுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வு மற்றும் சுங்கக் கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் காளியம்மன் கோயில் முன்பு 1008 தேங்காய் உடைத்து கண்டன முழக்கங்களை எழுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சாத்தூரில் வடக்கு ரத வீதியில் அமைந்துள்ள அம்மன் கோவில் முன்பு சாத்தூர் நகர இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்தும் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் சமையல் கியாஸ் விலை, நெடுஞ்சாலை சுங்கக் கட்டண உயர்வைக் கண்டித்தும் 1008 தேங்காய் உடைத்து நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சாத்தூர் நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார். சாத்தூர் காங்கிரஸ் நகரதலைவர் ஐயப்பன் முன்னிலை வகித்தார்.சாத்தூர் நகர இளைஞர் காங்கிரஸ் மற்றும் மகிளா காங்கிரஸ் நகர காங்கிரஸ் உறுப்பினர்கள் தொண்டர்கள் என ஏராளமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், சுங்கக் கட்டண உயர்வை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி