Home /local-news /

சாத்தூர்:  கல்குவாரி நீரில் மூழ்கி கல்லூரி மாணவி பலி - போலீசார் விசாரணை

சாத்தூர்:  கல்குவாரி நீரில் மூழ்கி கல்லூரி மாணவி பலி - போலீசார் விசாரணை

விருதுநகர் அருகே கல்குவாரி நீரில் மூழ்கி கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரி மாணவி பலி:-

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளி கிராமத்தில்உள்ள திருப்பதி என்பவருக்கு சொந்தமான செயல்படாத கிராவல் குவாரியில் வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தை சேர்ந்த பாலா என்பவரது மகள் அபிநயா (20) அவருடன் சரிதா (21) மனோரஞ்சனி (18) மற்றும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் குளிக்கச் சென்றுள்ளனர். குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அபிநயா, சரிதா, மனோரஞ்சனி ஆகியோர் நீரில் மூழ்கியுள்ளனர்.

    செல்லும் வழியிலேயே உயிரிழப்பு:-

    தகவல் அறிந்த கிராமத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துமணைக்கு கொண்டு சென்றனர். அபிநயா மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். சரிதா என்ற மாணவி கோவில்பட்டி அரசு மருத்துவமனையிலும், மனோரஞ்சனி என்ற மாணவி நுரையீரல் பகுதியில் நீர் புகுந்ததால் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மாணவியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை:-

    இச்சம்பவம் தொடர்பாக சாத்தூர் தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அபிநயா உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி