விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே எஸ்.வல்லக்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடாக தனியார் நெல் வியாபாரிகளின் தூற்றாத நெல் மூடைகளை ஏற்றிய லாரியை அப்பகுதி விவசாயிகள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகே எஸ்.வல்லக்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடாக தனியார் நெல் வியாபாரிகளின் தூற்றாத நெல் மூடைகளை ஏற்றிய லாரியை அப்பகுதி விவசாயிகள் சிறைபிடித்தனர்.
மேலும் அரசு வழங்கிய முத்திரையிடப்பட்ட சாக்குகளை இரவோடு, இரவாக கள்ளத்தனமாக தனியார் நெல் கொள்முதல் வியாபாரிகளின் இருப்பிடத்திற்கே கொண்டு சென்று நெல் மூடைகளை விற்பனைக்கு எடுக்க சென்று தனியார் நெல் வியாபாரிகள் போல் செயல்பட்ட அரசு நெல் கொள்முதல் நிலைய பொறுப்பாளர்கள் மீதும், அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுத்தும் நோக்கத்தில் இதற்கு உடந்தையாக செயல்பட்ட அரசு நெல் கொள்முதல் நிலைய அதிகாரி மீதும், நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு நெல் கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
மேலும் எங்களை விட தனியார் நெல் வியாபாரிகள் ரூ.150 முதல் 200 வரை தருகிறார்களோ? என கேள்வியெழுப்பிய அப்பகுதி விவசாயிகள் அதனால் தான் எங்களது நெல்மூடைகளை தூற்றாமல் வெயில், மழை, பனியென, கேட்பாரற்று கிடக்கிறதென விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
மாவட்ட நிர்வாகமும், உடனடியாக இதில் தலையிட்டு சம்மந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.