Home /local-news /

வாக்கிங் சென்ற மூதாட்டியிடம் தங்க செயின் பறிப்பு - தொடர் குற்றச் செயல்களால் அலறும் அருப்புக்கோட்டை

வாக்கிங் சென்ற மூதாட்டியிடம் தங்க செயின் பறிப்பு - தொடர் குற்றச் செயல்களால் அலறும் அருப்புக்கோட்டை

மூதாட்டியிடம்

மூதாட்டியிடம் தங்க செயின் பறிப்பு-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Virudhunagar District | அருப்புக்கோட்டை அருகே பாரதிநகரை சேர்ந்தவர் பிச்சைமணி என்பவரின் மனைவி சந்திரா (73). பிச்சைமணி இறந்து விடவே சந்திரா தனது மகன்களுடன் வசித்து வருகிறார்.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாரதிநகரில் நடைபயிற்சி மேற்கொண்ட 73 வயதான மூதாட்டியிடம் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க செயினை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.,இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை அருகே பாரதிநகரை சேர்ந்தவர் பிச்சைமணி என்பவரின் மனைவி சந்திரா (73). பிச்சைமணி இறந்து விடவே சந்திரா தனது மகன்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மூதாட்டி சந்திரா, பாரதிநகர் 3 வது தெருவில் நடைபயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சந்திரா கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

    மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த நகர் காவல்துறையினர் அப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு தப்பியோடிய மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் டி.எஸ்.பி சகாயஜோஸ் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

    குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் மூதாட்டியிடம் செயினைப் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அருப்புக்கோட்டை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மேலும் அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் குற்றப் பிரிவுக்கான ஆய்வாளர் பணியிடம் காலியாக இருப்பதால் பெருமளவு குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உடனடியாக டவுன் காவல் நிலையத்திற்கு குற்றப்பிரிவுக்கான புதிய இன்ஸ்பெக்டர் நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி