Home /local-news /

அருப்புக்கோட்டை ஸ்ரீ சவுண்டம்மன் கோயில் திருவிழா.. பக்தர்கள் கத்தி போட்டு வினோத நேர்த்தி கடன்.!

அருப்புக்கோட்டை ஸ்ரீ சவுண்டம்மன் கோயில் திருவிழா.. பக்தர்கள் கத்தி போட்டு வினோத நேர்த்தி கடன்.!

ஸ்ரீ

ஸ்ரீ சவுண்டம்மன் கோயில் கரக உற்சவ விழா - பக்தர்கள் உடலில் கத்தி போட்டனர்.

Virudhunagar District | விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஸ்ரீ சவுண்டம்மன் திருக்கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி கரக உற்சவ விழா நடந்தது. இதில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் உடலில் கத்தி போடும் வினோத நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர். | Virudhunagar

மேலும் படிக்கவும் ...
    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஸ்ரீ சவுண்டம்மன் திருக்கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி கரக உற்சவ விழா நடந்தது. இதில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் உடலில் கத்தி போடும் வினோத நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.இவ்விழாவில் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அருப்புக்கோட்டையில் ஸ்ரீ சவுண்டம்மன் திருக்கோயில் பங்குனி பொங்கல் கரக உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சவுண்டம்மனுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள், உடலில் கத்திபோடும் நிகழ்வு நடைபெற்றது. உடல் ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலன் வேண்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உடல் முழுவதும் சந்தனம் பூசிக்கொண்டு பக்தி பரவசத்துடன் கை, முதுகு மற்றும் நெஞ்சில் கத்தி போடும் வினோத நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    பக்தர்களுக்கு பிரசாதமாக அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் உள்ளூர் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி