விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் கணக்கி கிராமத்தில் பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமாரை பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் முறைகேடு செய்தமைக்காக வருவாய்க் கேட்டாட்சியர் கல்யாணக்குமார் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
விஏஓ பணியிடை நீக்கம்:-
அருப்புக்கோட்டை அருகே உள்ள கணக்கி கிராமத்தில் கிராமநிர்வாக அலுவலராக ஜெயக்குமார் என்பவர் பணிபுரிந்தார். இதற்கு முன்பு பணிபுரிந்த கிராமத்தில் முறைகேடாக சிலருக்கு பயிர் அடங்கல் வழங்கியதாகவும் அதன்மூலம் அக்கிராமத்தினர் சிலர் முறைகேடாக பயிர் காப்பீட்டுத் தொகை பெற்றதாக கூறப்படுகிறது. இவ்விபரம் வருவாய்த்துறை அதிகாரிகளின் ஆய்வின் போது உறுதிசெய்யப்பட்டதால் கணக்கி கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமாரை பணியிடை நீக்கம் செய்து அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யாணக்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.