விருதுநகர் அருகே முகக்கவசம் அணியாமல் நகருக்குள் நுழைய முயன்றவர்களை தடுத்து நிறுத்திய நகராட்சி, சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அபராதம் விதித்தனர்.
முக கவசம் அணியாத நபர்களுக்கு கொரோனா பரிசோதனை:-
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அருப்புக்கோட்டையில் முக கவசம் அணியாமல் நகருக்குள் நுழைய முயன்றவர்களை தடுத்து நிறுத்திய நகராட்சி மற்றும் சுகாதாரதுறை அதிகாரிகள் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். காந்திநகர் பகுதியில் முக கவசம் அணியாமல் இருசக்கர வாகனம், சரக்குவாகனம், பேருந்துகளில் பயணம் செய்தவர்களை நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் தலைமையில் தடுத்து நிறுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
50 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை-ரூ 6,000 அபராதம்:-
மேலும் பேருந்துகளில் முக கவசம் அணியாமல் பயணம் செய்தவர்கள் கீழே இறக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அபராதமும் விதித்தனர். மொத்தம் 50 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் ரூ 6,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதில், வட்டார மருத்துவ அலுவலர் சஞ்சய் பாண்டி, நகர் நல அலுவலர் ராஜநந்தினி, சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் சுகாதாரத்துறை பணியாளர்கள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.