விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அக்னி சட்டி எடுத்தல் பூக்குழி இறங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தினர் உள்ளூர் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அருப்புக்கோட்டையில் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் பங்குனி பொங்கல் உற்சவ விழா கடந்த 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அம்மனுக்கு காலை, மாலை இரு வேளைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அம்மன் இரவு பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அக்னிச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும், பூக்குழி இறங்கியும் பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
இவ்விழாவையொட்டி உள்ளூர் வெளியூர் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த பங்குனி பொங்கல் திருவிழா இந்த ஆண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.