விருதுநகர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட இரண்டு லட்சத்து பத்தாயிரம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி அருப்புக்கோட்டை கணேஷ் நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் முறையான ஆவணங்கள் இன்றி ரூபாய் இரண்டு லட்சத்து 10 ஆயிரத்து 110 இருந்தது.
விசாரணையில், காரியாபட்டியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் திருச்சுழியில் நிறுவனத்தின் பணத்தை வசூல் செய்து அருப்புக்கோட்டை வழியாக மீண்டும் காரியாபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.
எனினும், முறையான ஆவணங்கள் இல்லாததால் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
செய்தியாளர்:அ.மணிகண்டன்,
விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.