ஆண்கள் மட்டுமே ஈடுபட்டுவரும் புகைப்படக்கலை தொழிலில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த குடும்பத்தலைவி ஒருவர் சுமார் 22 ஆண்டுகளாக புகைப்பட கலைஞர் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
அனைத்து தொழில் துறைகளிலும் ஆண்களுக்கு போட்டியாக பெண்களும் முக்கிய பொறுப்புகளிலும் உயர் பதவிகளில் அங்கம் வகிக்கின்றனர். மிகவும் கடினமான, பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே ஈடுபட்டு வரும் போட்டி நிறைந்த தொழிலாக கருதப்படும் புகைப்படக்கலைத் துறையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சேர்ந்த குடும்பத்தலைவி குரு நாயகி என்ற குணா கடந்த 22 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.
இவர் சொந்தமாக போட்டோ ஸ்டூடியோ கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தனியாக புகைப்படம் அடுத்து அவரே எடிட் செய்து ஆல்பம் வடிமவைத்து தருகிறார். தொழில் நேர்த்தி காரணமாக இவருக்கு நாளுக்கு நாள் வாடிக்கையாளர்கள் அதிகரித்த வண்ணமே உள்ளனர்.
பொதுவாக திருமணம் போன்ற நிகழ்ச்சிகளின் போது போட்டோ ஷூட் எடுக்கும் போது ஆண் புகைப்படக் கலைஞர்கள் முன்னே புதுமணப் பெண்கள் போஸ் கொடுக்க கூச்சப்படுவார்கள். ஆனால், குரு நாயகி புகைப்படங்கள் எடுக்கும் போது பெண்களும், குழந்தைகளும் தயக்கமின்றி ஆர்வமாக புகைப்படங்கள் எடுத்துக் கொள்கின்றனர். இவருக்கு அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுப்ப்புற பகுதி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பெண் புகைப்படக் கலைஞர் குரு நாயகி கூறியதாவது, நான் கடந்த 22 ஆண்டுகளாக புகைப்படக் கலைஞராக தொழில் செய்து வருகிறேன். ஆண்கள் மட்டுமே செய்து வந்த புகைப்படக்கலை தொழிலில் பெண்களும் ஈடுபட்டு வருவதற்கு நான் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறேன். புகைப்படம் எடுப்பது எடிட் செய்வது ஆல்பம் போன்ற அனைத்து பணிகளையும் விரைவாகவும், நேர்த்தியாகவும் செய்து தருவதால் தனக்கு தொடர்ந்து ஆர்டர்கள் கிடைக்கின்றன.பெண்கள் அதிகளவு எனது ஸ்டுடியோவிற்கு வாடிக்கையாளர்களாக வருகின்றனர். அதேபோல் சுபநிகழ்ச்சிகளுக்கு ஆடர்கள் வந்த வண்ணம் உள்ளன என்றார்.
செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.