Home /local-news /

திறந்தவெளி பாராக மாறிய புதிய சார் பதிவாளர் அலுவலகம்

திறந்தவெளி பாராக மாறிய புதிய சார் பதிவாளர் அலுவலகம்

சார்

சார் பதிவாளர் அலுவலகம்

Virudhunagar |விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே  வீரசோழத்தில் பல லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் வேளாண் விரிவாக்க மையம் திறக்கப்படாததால் தற்போது குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது.

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வீரசோழத்தில் பல லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் வேளாண் விரிவாக்க மையம் திறக்கப்படாததால் தற்போது குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக சார் பதிவாளர் அலுவலகம் மற்றும் வேளாண் விரிவாக்க மையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரசோழன் கிராமத்தில் கடந்த 38 ஆண்டுகளுக்கு மேலாக தற்போது வரை சார் பதிவாளர் அலுவலகம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வந்த நிலையில் புதிதாக சார்பதிவாளர் அலுவலகம் கட்ட வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    அக்கோரிக்கையின் பேரில் இக்கிராமத்தில் பல லட்சம் மதிப்பீட்டில் சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் வேளாண் விரிவாக்க மையம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை புதிய கட்டிடங்கள் திறக்க படாமலேயே இருந்து வருகின்றன.

    இதனால் குடிமகன்கள் இப்பகுதிகளை மது அருந்தும் கூடாரமாக மாற்றி வருகின்றனர். மேலும் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் விலை உயர்ந்த மின் சாதனங்கள், ஜெனரேட்டர் போன்றவை இருப்பதால் திருட்டு சம்பவம் ஏற்படும்  சூழல் உருவாகியுள்ளது.

    இதுகுறித்து நம்மிடம் பேசிய கிராம மக்கள் கூறியதாவது, மக்கள் வரிப்பணத்தில் பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் சார்பதிவாளர் பத்திர அலுவலகம் பணிகள் முடிந்து 8 மாதங்கள் ஆகியும் தற்போது வரை திறக்கப்படாமல்  இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் வேளாண் விரிவாக்க மையத்தை திறந்த மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி