Home /local-news /

விருதுநகர்: முன்னாள் அமைச்சர்  கைதை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: முன்னாள் அமைச்சர்  கைதை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

விருதுநகர்:முன்னாள் அமைச்சர்  கைதை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

விருதுநகர்:முன்னாள் அமைச்சர்  கைதை கண்டித்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுகவில் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுகவில் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது திமுக பிரமுகர் ஒருவரை அரை நிர்வாணப்படுத்தி அடித்து இழுத்து சென்ற வீடியோ இணையத்தில் வெளியானது. இதையடுத்து இந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    பின்னர் அவர் மீது அரசு உத்தரவை மீறி சாலை மறியலில் ஈடுபட்டு தொற்று பரவ வழிவகுத்தாக வழக்கு பதிவு செய்யப்பட்டதுடன், தொழிற்சாலை அபகரிப்பு விவகாரத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு பல்வேறு பிரிவுகளில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர், ஜெயக்குமார் கைது நடவடிக்கைக்கு எதிராக திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது.

    இதனையடுத்து விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில், தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தின்போது திமுக அரசை எதிர்த்தும் பொய்வழக்கு போடுவதை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

    செய்தியாளர்: அ. மணிகண்டன்-விருதுநகர்
    Published by:Manosoundar M
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி