Home /local-news /

விருதுநகர்: தேர்தலில் தோல்வி - அதிமுக வேட்பாளரின் கணவர் தற்கொலை

விருதுநகர்: தேர்தலில் தோல்வி - அதிமுக வேட்பாளரின் கணவர் தற்கொலை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து,  அதிமுக வேட்பாளரின் கணவர் விஷம் அருந்தி  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட?

மேலும் படிக்கவும் ...
    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து, அதிமுக வேட்பாளரின் கணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முனிசிபல் காலனியைச் சேர்ந்தவர் சுகுணா(52) இவரது கணவர் நாகராஜ் (58). நகராட்சியில் மேஸ்திரியாக பணிபுரிந்து வந்தார். சுகுணா சாத்தூர் நகராட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததை அடுத்து, அவரது கணவர் நாகராஜ் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சியில் 24 வார்டுகளில்  திமுக பெரும்பான்மையான இடத்தை பிடித்து வெற்றி பெற்றது. இந்தநிலையில், 19வது வார்டு பகுதியில் மொத்தம் 930 வாக்குகள் பதிவானது. இதில், அதிமுக சார்பில் போட்டியிட்ட சுகுணா என்பவர் 215 வாக்குகள் பெற்றார்.  திமுக வேட்பாளர் சுபிதா 280 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    தோல்வியால், மனமுடைந்த நாகராஜ் விஷம் அருந்தியுள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால்,  சிகிச்சை பலனின்றி நாகராஜ் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர்:அ.மணிகண்டன்- விருதுநகர்
    Published by:Alagesan R
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி