Home /local-news /

அரிவாளால் வெட்டப்பட்ட அதிமுக பிரமுகர் உயிரிழப்பு - அரசியல் கொலைகளால் அதிரும் திருச்சுழி

அரிவாளால் வெட்டப்பட்ட அதிமுக பிரமுகர் உயிரிழப்பு - அரசியல் கொலைகளால் அதிரும் திருச்சுழி

அதிமுக பிரமுகர் சத்தியமூர்த்தி

அதிமுக பிரமுகர் சத்தியமூர்த்தி

Virudhunagar District | திருச்சுழி பகுதியில் ஒரு மாதத்தில் மட்டும் அதிமுக, திமுக ஆகிய இரு பெரும் கட்சிகளைச் சேர்ந்த இரு பிரமுகர்களின் கொலைகள் நடந்துள்ளதால் திருச்சுழி பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் கடந்த 25-ம் தேதி மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையிலிருந்த , அதிமுக பிரமுகர் சத்தியமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலை குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    திருச்சுழி பாறைக்குளத்தைச் சேர்ந்தவரும், அதிமுக முன்னாள் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு பண்டகசாலைத் தலைவராகப் பதவி வகித்தவருமான சத்தியமூர்த்தி (வயது 45) என்பவர் கடந்த 25-ம் தேதி திருச்சுழி மாரியம்மன் கோவிலின் பின்புறம் நடந்துசென்றபோது மர்ம நபர்களால் தலை,கழுத்து ஆகிய இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்டார்.

    இதையடுத்து அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி மற்றும் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதாக மர்ம நபர்கள் மீது போடப்பட்ட வழக்கை தற்போது கொலை வழக்காக மாற்றிய திருச்சுழி காவல்துறையினர், இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொலைக் குற்றவாளிகளாகிய மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

    திருச்சுழி பகுதியில் ஒரு மாதத்தில் மட்டும் அதிமுக, திமுக ஆகிய இரு பெரும் கட்சிகளைச் சேர்ந்த இரு பிரமுகர்களின் கொலைகள் நடந்துள்ளதால் திருச்சுழி பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Crime News, Murder, Virudhunagar

    அடுத்த செய்தி