Home /local-news /

விருதுநகர்: வேட்பாளர்களுக்கு போட்டியாக குதிரை வண்டியில் வந்து வாக்களித்த வாக்காளர்

விருதுநகர்: வேட்பாளர்களுக்கு போட்டியாக குதிரை வண்டியில் வந்து வாக்களித்த வாக்காளர்

வேட்பாளர்களுக்கு போட்டியாக குதிரை வண்டியில் வந்து வாக்களித்த வாக்காளர்கள்

வேட்பாளர்களுக்கு போட்டியாக குதிரை வண்டியில் வந்து வாக்களித்த வாக்காளர்கள்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் குதிரை வண்டியில் வந்து வாக்களித்த வாக்காளரை பொதுமக்கள் பெரும் ஆச்சரியத்துடன் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் குதிரை வண்டியில் வந்து வாக்களித்த வாக்காளரை பொதுமக்கள் பெரும் ஆச்சரியத்துடன் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.



    அருப்புக்கோட்டையில் வேட்பாளர்களுக்கு போட்டியாக வாக்காளர் ஒருவர் குதிரை வண்டியில் வாக்களிக்க வந்து பொதுமக்களை பெரிதும் ஆச்சிரியப் படுத்தினார்.அருப்புக்கோட்டை பெரிய தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தினமான இன்று பழைய தேவாங்கர் கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு தான் வைத்திருக்கும் குதிரை வண்டியில் சென்று ராமலிங்கம் வாக்களித்தார்.

    குதிரை வண்டியில் வந்த ராமலிங்கத்தை போலீசார் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு சென்று வாக்களிக்குமாறு அறிவுறுத்தினர்.மேலும் மாலை நேரம் ஆகிவிட்டதாலும் வேறு வாகனங்கள் இல்லாததாலும் வாக்குப்பதிவு முடியும் நேரத்திற்குள் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவும் குதிரை வண்டியில் வந்து வாக்களித்ததாக ராமலிங்கம் தெரிவித்தார்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன்-விருதுநகர்
    Published by:Manosoundar M
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி