விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே சத்திரம்புளியங்குளம் கிராமத்தில் கிணற்றில் விழுந்த நாயை ஒரு மணி நேரமாகப் போராடி மீட்ட தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே சத்திரம்புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இருளாண்டி என்பவருடைய விவசாய கிணற்றில், இரண்டு நாட்களாக நாய் விழுந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் காரியாபட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால்சாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
கிணற்றில் விழுந்த நாயை மீட்க தீயணைப்பு வீரர் அப்துல் விரைவாக செயல்பட்டு, கிணற்றுக்குள் இறங்கி ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு பத்திரமாக நாயை மீட்டு கயிறு கட்டி மேலே கொண்டு வந்தனர்.
மீட்கப்பட்ட நாய் யாருடையது என்பது விசாரணை செய்யப்பட்டதில் அது தெருநாய் என்பது தெரியவந்தது. மீட்கப்பட்ட நாயை அப்பகுதியில் தீயணைப்புத் துறையினர் விட்டனர்.
நாய் நன்றியுள்ளது என்ற பழமொழிக்கு ஏற்ப ஐந்தறிவு ஜீவன் என்றாலும் கூட மனிதருக்கு இணையாக நாயும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் விதமே மீட்கப்பட்டதற்கு சாட்சியாகும்.
வாயில்லாத ஜீவனை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
செய்தியாளர்: அ. மணிகண்டன் - விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.