Home /local-news /

விருதுநகரைச் சேர்ந்த 6ம் வகுப்பு மாணவியின் அபார உலக சாதனை...!!

விருதுநகரைச் சேர்ந்த 6ம் வகுப்பு மாணவியின் அபார உலக சாதனை...!!

விருதுநகரைச்

விருதுநகரைச் சேர்ந்த 6ம் வகுப்பு மாணவியின் உலக சாதனை...!!

Virudhunagar | சிறுமி ராஜ ஸ்ரீ தற்போது தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் யோகா கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்

    விருதுநகரில் 10 வயது சிறுமி டயர் நடுவில் உடம்பை வில்லாய் வளைத்து சமகால உருட்டல் முறையில் 100 மீட்டர் வரை லகுவ ஜராசனம் மற்றும் கண்ட பரண்டாசனத்தை இணைத்து செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டுக்களும். வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

    விருதுநகர் அய்யனார் நகரைச் சேர்ந்தவர் சுடலை வேல் - கலையரசி தம்பதியர், இவர்களது மகள் ராஜ ஸ்ரீ ( வயது 10 ) தற்போது தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் யோகா கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் எனவே இவரை கடந்த 5 வருடமாக யோகா பள்ளியில் சேர்த்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில இவர் உலக சாதனை படைக்க வேண்டும் என ஆர்வம் கொண்டு கடந்த 7 மாதமாக லகுவஜராசனம் மற்றும் கண்ட பரண்டாசனத்தை ஒன்றிணைத்து டயர் நடுவில் உடம்பை வில்லாய் வளைத்து 100மீட்டர் தூரம் வரை செய்து காண்பித்து நோபல் புக் ஆப் ரெக்கார்டில் இடம்பித்தார்.

    நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மேற்பார்வையாளர்கள் சிறுமி செய்த சாதனையை பாராட்டி சான்றிதழும் பதக்கமும் வழங்கி பாராட்டினர். மேலும் சிறுமிக்கு பயற்சி அளித்த யோகா ஆசிரியர், பெற்றோர்கள் மற்றும் உடன் பயிலும் மாணவர்களும் குழந்தையை பாராட்டி ஊக்குவித்தனர்.

    செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி