விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் ஒரு லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இக்கொள்ளைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
சாத்தூர் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த தாமோதரன் ராஜ புஷ்பம் தம்பதிக்கு அப்பகுதியில் சொந்தமாக பீரோ தொழிற்சாலை வைத்து நடத்தி வருகின்றனர். தம்பதிகள் இருவரும் நேற்று தனது உறவினர் வீட்டு திருமண விசேஷத்திற்காக வெளியூர் சென்று இன்று திரும்பிய பொழுது வீடு வீட்டின் கதவு திறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தாமோதரன் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பணம் மற்றும் நகை திருடு போனது தெரியவந்தது.
இதனை அடுத்து வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை ,1 லட்ச ரூபாய் பணம் திருடுபோன சம்பவம் குறித்து சாத்தூர் நகர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் நகர் போலீசார் திருட்டு சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தில் விசாரணை மேற்கொண்டனர். விருதுநகரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் கைரேகைகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்த மர்ம நபர் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.