சிவகாசி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட 322 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 318 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான பொது வார்டுகளான 5 மற்றும்10 வது வார்டில் பாமக வேட்பாளர்களாக முருகன் மற்றும் பாண்டியராஜன் தாக்கல் செய்திருந்த 2 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதேபோல், 4 வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜான்சிராணி என்பவர் தனது மனுவை வாபஸ் பெற்றார்.
318 வேட்புமனுக்கள் ஏற்பு:-
43 வது வார்டில் அதிமுக மாற்று வேட்பாளர் அன்புச்செல்வி என்பவருக்கு முன்மொழிந்த முத்துவிஜயன் என்பவர் 44 வது வார்டு குடியிருப்புவாசி என்பதால் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மூன்று வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, ஒரு வேட்புமனு வாபஸ் பெறப்பட்டதால் மொத்தம் 318 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.