Home /local-news /

விருதுநகர்: கெட்டுப்போன 120 கிலோ மீன் இறைச்சி-அதிர்ந்துபோன அதிகாரிகள்

அருப்புக்கோட்டை, காரியாபட்டி பகுதிகளில் மீன் மற்றும் இறைச்சி விற்பனைக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 120 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து ரசாயனம் ஊற்றி அழித்தனர்.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, கல்குறிச்சி, காரியாபட்டி ஆகிய பகுதிகளில் மீன் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்களில் காலாவதியாகி கெட்டுப்போன மீன்கள் மற்றும் இறைச்சிகள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
    அப்புகாரின்பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி முகமது இஸ்மாயில் காசிம் மற்றும் அவரது குழுவினர், புகார் தெரிவிக்கப்பட்ட மூன்று நகரங்களில் உள்ள ஏழு கடைகளில் நடத்திய சோதனையில் காலாவதியான சுமார் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 120 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர்.
    பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை நகராட்சி ஊழியர்கள் ரசாயனம் ஊற்றி அழித்தனர். பின்னர் காலாவதியான மீன்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அபராதம் விதிக்கப்படும் எனவும் அதிகாரிகளால் விற்பனை நிலையங்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Alagesan R
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி