விருதுநகரில் 11 வயது சிறுமி அந்தரத்தில் 25 அடி உயரத்தில் தொங்கியபடி வளையத்திற்குள் உடம்பை வில்லாய் வளைத்து வாளை கிழியாசனத்தை 8 நிமிடம் செய்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
விருதுநகர் அருகே சூலக்கரையைச் சேர்ந்த தம்பதி கோவிந்தராஜ் - பார்வதி இவர்களது மகள் முஜிதா (11) தற்போது தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் யோகா கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கடந்த 5 வருடமாக யோகா பள்ளியில் சேர்த்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில இவர் உலக சாதனை படைக்க வேண்டும் என ஆர்வம் கொண்டு கடந்த 2 மாதமாக வாளை கிழியாசனம் செய்வதற்கு பயிற்சி எடுத்தார்.
மேலும் இந்த ஆசனத்தை 25 மீட்டர் உயரத்தில் அந்தரத்தில் தொங்கியபடி வளையத்தின் மேல் உடம்பை வில்லாய் வளைத்து 8 நிமிடம் செய்து காண்பித்து நோபல் புக் ஆப் ரெக்கார்டில் இடம்பிடித்து புதிய உலக சாதனை படைத்தார்.
நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மேற்பார்வையாளர்கள் சிறுமி செய்த சாதனையை பாராட்டி சான்றிதழும் பதக்கமும் வழங்கினர். மேலும் சிறுமிக்கு பயற்சி அளித்த யோகா ஆசிரியர் மற்றும் உடன் பயிலும் மாணவர்களும் குழந்தையை பாராட்டி ஊக்குவித்தனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.