கொரோனா பரவல் காரணமாக வரும்26-ம் தேதி குடியரசு தினத்தன்று மாவட்டம் முழுவதும் நடைபெற இருந்த கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார்.
குடியரசு தினத்தில் கிராமசபை கூட்டம்:-
வரும் ஜனவரி 26 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெற இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் குடியரசு தினம் அன்று மாவட்டம் முழுவதும் உள்ள 450 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில் அரசின் அறிவிப்பால் விருதுநகர் மாவட்டத்தில் வரும் 26- தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு குடியரசு தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் நடப்பாண்டு குடியரசு தினத்தில் கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.