நியூஸ் 18 செய்தி எதிரொலியாக விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அரசு உயர்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியைக்கு 2022-ம் ஆண்டுக்கான சிறந்த நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருது பெற்ற ஆசிரியைக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
விருதுநகர் மாவட்டம் உழக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வந்த அருப்புக்கோட்டை ஆத்திபட்டியை சேர்ந்த முதுகலை பட்டதாரி ஆசிரியை பூமாரி, தூத்துக்குடி மாவட்டம் வெம்பூர் உயர்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்தச் செய்தியை அறிந்த பள்ளி மாணவ மாணவிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மாணவர்கள் ஆசிரியர்கள் சார்பில் ஆசிரியைக்கு பிரியாவிடை அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியருக்கு கேக் வெட்டி வழங்கும் விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கண்ணீர் மல்க வழியனுப்பிய நெகிழ்ச்சி சம்பவம் குறித்து நியூஸ் 18 செய்தி வெளியானது.
இந்நிலையில், நியூஸ் 18 செய்தி எதிரொலியாக விருதுநகர் கிழக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில், முதுகலைப் பட்டதாரி ஆசிரியை பூமாரிக்கு 2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. விருது பெற்ற ஆசிரியைக்கு குடும்பத்தினர் உறவினர்கள் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் பலரும் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்த செய்தி வெளியிட்ட நியூஸ் 18 -க்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பூமாரி மற்றும் அவரது குடும்பத்தினர் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்.
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.