விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள கால்நடை உதவியாளர் பணிக்கான நேர்காணல் நாளை நடைபெற இருந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார்.
கால்நடை உதவியாளர் பணிக்கான நேர்காணல் தற்போது தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான நேர்காணல் அழைப்பு கடிதங்கள் அஞ்சல் மூலம் ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளன.
முன்னதாக, இப்பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் நாளை 28-ம் தேதி முதல் மே 9-ஆம் தேதி வரை மாவட்ட விளையாட்டு அரங்கில் இப்பணிக்கான நேர்காணல் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் மேகநாதர் அறிவித்துள்ளார். நேர்காணல் நடைபெறும் தேதி மற்றும் அதற்குள்ளாக நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை நடைபெற இருந்த கால்நடை உதவியாளர் பணிக்கான நேர்காணல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார். மேலும் நேர்காணலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கால்நடை உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்து நேர்காணலுக்கு தயாராக இருந்த விண்ணப்பதாரர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.