Home /local-news /

களையிழந்த வீரக்குடி ஸ்ரீ கரைமேல் முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா - பக்தர்கள் ஏமாற்றம்

களையிழந்த வீரக்குடி ஸ்ரீ கரைமேல் முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா - பக்தர்கள் ஏமாற்றம்

கோயில்

கோயில் மூடப்பட்டதால் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கோயிலின் நுழைவு வாயிலில் வழிபாடு நடத்திவிட்டு பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கோயில் மூடப்பட்டதால் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கோயிலின் நுழைவு வாயிலில் வழிபாடு நடத்திவிட்டு பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

  • Last Updated :
    கொரோனா பெருந்தொற்று காரணமாக மாவட்டம் முழுவதும் தைப்பூசத்தையொட்டி முருகன் கோயில்கள் மூடப்பட்டதால் பக்தர்கள் பெரும் ஏமாற்றத்துடன் கோயில் வெளியே நின்று வழிபாடு நடத்தி விட்டுச் செல்கின்றனர்.

    கோயில்கள் மூடல்:-

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை நாட்களில் கோவில்களில் பக்தர்களுக்கு வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தைப்பூச பண்டிகையையொட்டி இன்று மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் முருகப்பெருமானுக்கு பக்தர்கள் இன்றி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனால் பெரும்பாலான கோயில் வளாகம் பக்தர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    பக்தர்கள் பெரும் ஏமாற்றம்:-

    அந்தவகையில், நரிக்குடி அருகே உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற வீரக்குடி ஸ்ரீ கரைமேல் முருகன் திருக்கோயில் தைப்பூசத்தையொட்டி மூலவரான முருக ஐயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

    கோயில் மூடப்பட்டதால் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கோயிலின் நுழைவு வாயிலில் வழிபாடு நடத்திவிட்டு பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஒரு சில பக்தர்கள் கோயில் நுழைவாயில் பொங்கல் வைத்தும் மொட்டை அடித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி சென்றனர்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Vijay R
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி