Home /local-news /

மத்திய அரசுக்கு எதிரான 2வது நாள் போராட்டம் - அருப்புக்கோட்டையில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

மத்திய அரசுக்கு எதிரான 2வது நாள் போராட்டம் - அருப்புக்கோட்டையில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

மத்திய அரசுக்கு எதிராக 2 வது நாளாக தொழிற்சங்கங்கள் போராட்டம்

மத்திய அரசுக்கு எதிராக 2 வது நாளாக தொழிற்சங்கங்கள் போராட்டம்

Virudhunagar : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில்  இந்தியன் வங்கி முன்பு, மத்திய அரசுக்கு எதிராக, தொழிற்சங்கங்களின் 2 வது நாள் போராட்டம் நடைபெற்றது.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இந்தியன் வங்கி முன்பு மத்திய அரசுக்கு எதிரான தொழிற்சங்கங்கள் நடத்திய இரண்டு நான் போராட்டத்தின் ஒரு பகுதியாக, 2 வது நாள் போராட்டம் நேற்று நடைபெற்றது. அதில், அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில்  கண்டன கோஷங்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும், மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தொழிற்சங்கங்களின் இரண்டு நாள் போராட்டம் நடைபெற்றது.

    இந்நிலையில் போராட்டத்தின் 2 வது நாளில், அருப்புக்கோட்டையில் இந்தியன் வங்கி முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

    திமுக, விசிக, காங்கிரஸ் ஏஐசிசிடியூ சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
    Published by:Suresh V
    First published:

    Tags: Protest, Virudhunagar

    அடுத்த செய்தி