விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பைக் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் பைக்கில் சென்ற இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகிஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை பகுதியில் நேற்று மாலை இரு சக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதிய வாகன விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த நிலையில், உயிரிழந்தவர்கள் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் கண்டிவாளையம் பகுதியைச் சேர்ந்த வீரன் (55) என்பவர் இருசக்கர வாகனம் ஒட்டி வந்தவர் என்பதும், அவருடன் பின்னால் அமர்ந்து வந்தவர் அதே மாவட்டத்தை சேர்ந்த திருச்செங்கோடு சிறுமொளசி பகுதியைச் சேர்ந்த தர்மன் (45) என்பதும் இவர்கள் சுமார் 10 க்கும் மேற்பட்டோர் கிணறு தோண்டும் பணிக்காக இப்பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்ததாகவும் தெரியவந்தது.
இந்நிலையில், வீரன் மற்றும் தர்மன் இருவரும்இருசக்கர வாகனத்தில் அக்கரைபட்டியிலிருந்து வெம்பக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தபோது வீரகாளியம்மன் கோவில் விலக்கு அருகே வெம்பக்கோட்டையிலிருந்து சங்கரன்கோவிலுக்கு சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து மோதியதில் வீரன் தர்மன் இருவரும் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக அரசு பேருந்து ஒட்டுநர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கொத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள் (48) மற்றும் நடத்துநர் மதுரை ஒத்தக்கடை புதுத் தாமரைபட்டி பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி ஆகிய இருவர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள இருந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.