மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தாய் உள்ளிட்ட இருவர் போக்சோ வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு கீழத் தெருவை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு அவரது தாய் உடந்தையோடு ஒருவர் பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாக 1098க்கு அழைப்பு வந்துள்ளது. அதையடுத்து, விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜானகி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை இறந்துவிட்டதால் தாய் பூபதிக்கும், கூனம்பட்டியைச் சேர்ந்த பாண்டிமுருகன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாண்டிமுருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தாயிடம் அச்சிறுமி கூறியுள்ளார்.
ஆனால் இதுபற்றி யாரிடமும் கூறக் கூடாது என்று அச்சிறுமியை தாய் கண்டித்து, கையால் அடித்து காயப்படுத்தியது தெரியவந்தது.
இதுகுறித்து, வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சமூக பணியாளர் ஜானகி புகார் அளித்தார். அதையடுத்து, போக்சோ வழக்குப் பதிவு செய்து பாண்டி முருகன் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் பூபதி ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர்.
செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.