Home /local-news /

இடி தாக்கி பெண் பலி.. தொடர் மணல் திருட்டு.. விருதுநகர் மாவட்ட இன்றைய முக்கிய செய்திகள்..

இடி தாக்கி பெண் பலி.. தொடர் மணல் திருட்டு.. விருதுநகர் மாவட்ட இன்றைய முக்கிய செய்திகள்..

விருதுநகர் மாவட்டத்தின் (11.04.2022) இன்றைய முக்கிய செய்தி தொகுப்பு

விருதுநகர் மாவட்டத்தின் (11.04.2022) இன்றைய முக்கிய செய்தி தொகுப்பு

Virudhunagar: இடி தாக்கி பெண் பலி.. நரிக்குடியில் தொடர் தொடர் மணல் திருட்டு.. விருதுநகர் மாவட்ட இன்றைய முக்கிய செய்திகள்..

    இடி தாக்கி பெண் பலி.. நரிக்குடியில் தொடர் தொடர் மணல் திருட்டு.. விருதுநகர் மாவட்ட இன்றைய முக்கிய செய்திகள்..

    திருச்சுழி அருகே இடி தாக்கியதில் பெண் பலி:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள எம்.புளியங்குளம் கிராமத்தில் விவசாய நிலத்திற்கு சென்ற பெண் மீது இடி மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விருதுநகர் மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உழவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா எம்.புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த ஆதிநாராயணன் என்பவரது மனைவி முத்துக்கருப்பாயி வயது(44).இவர் இன்று பருத்தி எடுப்பதற்காக வயலுக்கு சென்று விட்டு வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் மேகம் இருள்சூழ்ந்த நிலையில் வயலில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த தனது தம்பிக்கு குடை எடுத்துக்கொண்டு மீண்டும் வயலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. ப்போது பெய்த மழையின் காரணமாக திடீரென இடி, மின்னல் தாக்கியதில் முத்துக்கருப்பாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து திருச்சுழி வட்டாட்சியர் சிவகுமார் உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் உட்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருச்சுழி- நரிக்குடியில் தொடர் மணல் கடத்தல் 5 பேர் கைது-போலீஸ் அதிரடி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள நரிக்குடி மற்றும் கட்டனூர் ஆற்றுப் பகுதிகளில் சட்டவிரோதமாக லாரி மற்றும் மாட்டு வண்டியில் ஆற்று மணலை ஏற்றி சென்ற 5 நபர்களை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரிகள் பறிமுதல் செய்தனர்.

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள நரிக்குடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சார்பு காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் போலீசார் சாலை இலுப்பைக்குளம் உலக்குடி சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது உலக்குடி நோக்கி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது லாரியில் அரசு அனுமதியின்றி சுமார் 3 யூனிட் ஏற்றுக் கொண்டது தெரியவந்தது.
    இதைத்தொடர்ந்து திருச்சுழி பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவரான நாகூர்கனி, ஜோதிபாசு, சந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த லாரியை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் நரிக்குடி அருகே உச்சனேந்தல்-P.வாகைக்குளம் செல்லும் சாலை அருகேயுள்ள பகுதியில் ஆற்றுமணல் அள்ளிவந்த இரண்டு மாட்டுவண்டிகளை நிறுத்தி சோதனை செய்ததில் அரசு அனுமதியின்றி கிருதுமால் ஆற்றில் திருட்டுத்தனமாக ஆற்றுமணல் அள்ளி வந்தது தெரியவந்தது.

    இந்நிலையில் மாட்டு வண்டிகளுடன் அரை யூனிட் ஆற்றுமணலையும் பறிமுதல் செய்த கட்டனூர் போலீசார் அதனை காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

    இதனையடுத்து கிருதுமால் ஆற்றில் அரசு அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் ஆற்றுமணல் அள்ளிவந்த சிவகங்கை மாவட்டம் S.வாகைக்குளம் பகுதியை சேர்ந்த கார்த்திக்(29), அருள்குமார்(21) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த கட்டனூர் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.மேலும் இந்த ஆற்றுமணல் திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சொத்து வரி உயர்வை கண்டித்து மாநகராட்சி நகராட்சி அதிமுக வெளிநடப்பு

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி, நகர்மன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வாயில் கருப்பு துணி கட்டி வெளிநடப்பு செய்தனர். விருதுநகர், இராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில் அதிமுக அமமுக கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வை கண்டித்து தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

    அதிமுக கவுன்சிலர் வெளிநடப்பு செய்தாலும் திமுக உறுப்பினர்கள் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அருப்புக்கோட்டை கிளை நூலகத்தில் புதிய சலுகை-டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வர்கள் படு குஷி

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கிளை நூலகத்தில் விடுமுறை தினங்களிலும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வர்களுக்கு பயன்பெறும் வகையில் படிப்பதற்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளதற்கு வாசகர்கள் மற்றும் போட்டி தேர்வர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகின்றன.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்நூலகத்தில் வரலாறு, தமிழ் நூல்கள், இலக்கியங்கள், சிறுகதைத் தொகுப்புகள், கவிதைகள் இலக்கணம் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு வகையான 15,279 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூலகத்தில் சுமார் 10 ஆயிரத்து 628 பேர் வாசகர்களாக உள்ளனர். மேலும் தினசரி 200 மேற்பட்ட வாசகர்கள் வந்து செல்கின்றன.

    அதேபோல் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்கள் நூலகத்தை பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். தினசரி 60 முதல் 80க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வர்கள் நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    செய்தியாளர்: அ.மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி