Home /local-news /

விருதுநகர் இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.!

விருதுநகர் இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு.!

விருதுநகர் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்தி தொகுப்பு

விருதுநகர் மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்தி தொகுப்பு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மின்வாரியம் சார்பில் விவசாயிகளுடன் காணொலியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
    ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் தேரோட்டம்-பக்தர்கள் பக்தி பரவசம்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது. பெருந்திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். உள்ளூர் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புளியம்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது.
    பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் திருத்தேர் வீதி உலா புளியம்பட்டியில் உள்ள கோவிலில் இருந்து துவங்கி விருதுநகர் ரோடு, பெரிய புளியம்பட்டி காந்தி மைதானம், வேலாயுதபுரம் உள்ளிட்ட தேரோடும் வீதிகள் வழியாக மீண்டும் கோவிலில் சென்று நிறைவுற்றது. முன்னதாக திமுக மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் கேகேஎஸ்எஸ்ஆர்ஆர்.ரமேஷ் திருத்தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தார்.

    திருத்தேரில் எழுந்தருளிய அருள்மிகு ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மனை வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டு மகிழ்ந்தனர். இந்த திருத்தேர் வீதி உலா நிகழ்ச்சியில் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மின்வாரியம் சார்பில் விவசாயிகளுடன் காணொலியில் முதல்வர் கலந்துரையாடல்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் மின்வாரியம் சார்பில் விவசாயிகளுடன் காணொலியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் 207 விவசாயிகள் நேரில் கலந்து கொண்டனர்.

    அருப்புக்கோட்டையில் விவசாயிகளுக்கு புதிதாக மின்சாரம் வழங்கிய திட்டம் குறித்து விவசாயிகள் கலந்துரையாடிய நிகழ்ச்சிக்கு காணொலி மூலம் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். அருப்புக்கோட்டை நகர்மன்றத் ததலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம், ஒன்றியக்குழுத்தலைவர் சசிகலா பொன்ராஜ் , அருப்புக்கோட்டை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் இரா.கண்ணன்,உதவி செயற்பொறியாளர் பத்மநாபன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மின்வாரிய கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளான அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, ஆகிய பகுதிகளில் புதிதாக மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் ,தமிழகத்தில் திமுக அரசு பதவிக்கு வந்தது முதலாக ஒரு லட்சம் புதிய விவசாய மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்பதில் மகிழ்ச்சியடைவதாகக்கூறிய அவர், விவசாயம் சார்ந்த நவீன தொழில்நுட்பங்கள், திட்டங்கள், கருவிகள், மாணியங்கள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் இந்திய அளவிலான பரந்து நிற்கும் சந்தையில் விளைபொருட்கள் விற்பனை குறித்தும் விவசாயிகளிடையே உரையாடினார்.

    விருதுநகர் கௌசிகா ஆற்றில் கோவிந்தா சரண கோஷத்துடன் இறங்கிய கள்ளழகர்.!

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் செந்நெல்குடியில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.உள்ளூர் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விருதுநகர் மாவட்டம் செந்நெல்குடியில் அருள்மிகு ஸ்ரீ வெங்கடாசலபதி கோவில் சித்திரைத் திருவிழாவை ஒட்டி கள்ளழகர் கௌசிகா ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கள்ளழகர் குதிரை வாகனம் மூலம் கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக சென்றடைந்து கௌசிக ஆற்றில் இறங்கினார்.
    இந்நிகழ்வை காண உள்ளூர் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    நம்மாழ்வார் பாணியில் இயற்கை வழியில் அசத்தும் விவசாயி.!

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டியில் முதன் முறையாக பசுமை குடில் அமைத்து விவசாயி ஒருவர் இயற்கை முறையில் விவசாய நாற்றுகள் மற்றும் கன்றுகள், நாட்டு விதைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து மலிவு விலையில் விற்பனை செய்து வருகிறார். மரம் வளர்ப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இது குறித்த செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள செம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் தலைமுறை தலைமுறைகளாக நம்மாழ்வார் வழியில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். மேலும் பொதுமக்களிடம் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆத்திபட்டி பகுதியில் முதல் முறையாக பசுமை குடில் அமைத்து விவசாய நாற்றுகள் கன்றுகள் பண்ணை அமைத்துள்ளார்.
    இந்த பண்ணை மூலம் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட வாழை, தென்னை, நெல்லி, கொய்யா ,முருங்கை, மாதுளை, மற்றும் பனிப் பிரதேசங்களில் மட்டும் விளையக்கூடிய முட்டைகோஸ், சப்போட்டா, காலிபிளவர், மல்லிகை, ரோஜா உள்ளிட்ட பூக்கள் போன்ற பல்வேறு வகையான கன்றுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார்.

    செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Virudunagar

    அடுத்த செய்தி