Home /local-news /

விருதுநகர் மாவட்டத்தில் இன்று (06.05.22) நடந்த முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்!

விருதுநகர் மாவட்டத்தில் இன்று (06.05.22) நடந்த முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள்!

விருதுநகர் மாவட்டத்தில் இன்றைய முக்கிய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் இன்றைய முக்கிய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் இன்று (06.05.22) நடந்த முக்கிய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை தெரிந்துக்கொள்ளலாம்.

    1.வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்-இளநீர் கரும்புச்சாறு நுங்கு பதநீரும் நாடும் மக்கள்

    விருதுநகர் மாவட்டம் முழுவதும் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ளதால் வெப்பத்தை தணிப்பதற்கு பொதுமக்கள் இளநீர் கரும்புச்சாறு நுங்கு பதநீர் உள்ளிட்ட நீர் பானங்களை பெருமளவு நாடி வருவதால் தற்போது அதன் விற்பனை சூடுபிடித்துள்ளது. இதனால் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    விருதுநகர் மாவட்டம் முழுவதும் அக்னி நட்சத்திரத்தின் கோரத்தாண்டவத்தை வெப்பத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் அவலம் தொடர்கிறது. இந்த வெப்பத்தை தணிப்பதற்கு ஆக பொதுமக்கள் இளநீர் மோர் பதநீர் நுங்கு கரும்புச்சாறு உள்ளிட்ட நீர் குளிர் பானங்களை பெருமளவு நாடிச் செல்வதால் இத்தொழில் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மரத்தின் நிழலில் இளநீர் கடை பதநீர் நுங்கு கரும்புச்சாறு கடைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. பொதுமக்களும் வெயிலின் வெப்பத்தை தணிப்பதற்கு ஆகவும் தாகத்தை தீர்த்துக் கொள்வதற்காக இயற்கை பானங்களான பதநீர் கரும்புச்சாறு நுங்கு உள்ளிட்டவற்றை நாடிச் செல்கின்றனர்.

    இதனால் விற்பனை தற்போது சூடு பிடித்துள்ள தாக இத்தொழிலில் ஈடுபடும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இளநீர் பொள்ளாச்சி பகுதியில் இருந்தும் பதநீர் நுங்கு ஆகியவை சங்கரன்கோவில் பகுதியில் இருந்து விற்பனைக்காக விருதுநகர் மாவட்டத்தின் உள்ள பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. இத்தொழிலில் நல்ல வருமானம் கிடைப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் அதிக விலையுடைய செயற்கை குளிர்பானங்களை விட விலை குறைந்ததாகவும் உடலுக்கு வலு சேர்க்க கூடிய குளிர்பானங்கள் இளநீர் 1 ரூபாய் 60 க்கு விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் பதநீர் ரூபாய் 20 க்கு விற்பனை செய்யபடுகிறது 100 ரூபாய் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது கரும்புச்சாறு 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்களும் குளிர்பானங்களை விலை குறைவாக இருப்பதால் அருந்துவது ஓடு பார்சலாக வீட்டுக்கு வாங்கிச் செல்கின்றனர்.


    2.கூலிங் பீர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்து-பெரும் அதிர்ச்சி தகவல் இளைஞர்கள் உஷார்

    மாவட்டம் முழுவதும் அக்னி நட்சத்திர வெயில் மக்களை வாட்டி வரும் நிலையில் டாஸ்மார்க் கடைகளில் கூலிங் பீர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. குடி மகன்களும் போட்டிபோட்டு கூலிங் பீரை வாங்கி செல்கின்றனர். கூலிங் பீர் அருந்துவதால் ஏற்படும் நன்மை தீமைகள் குறித்து விளக்குகிறது இது குறித்த செய்தி தொகுப்பு.


    விருதுநகர் மாவட்டம் முழுவதும் அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளதால் அதிக வெப்பத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். உடல் வெப்பத்தை தணிப்பதற்கு இளநீர் மோர் கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு வகையான பானங்களை அருந்தி வெப்பத்தை தனித்து வருகின்றனர். அதேபோல மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் வெயிலின் வெப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக கூலிங் பீர் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இதனால் மாவட்டத்தில் பீர் விற்பனை சராசரி அளவை விட தற்போது அதிகரித்துள்ளதாக டாஸ்மாக் கடை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    அதுபோல் சாதாரண நாட்களில் விற்பனை செய்யப்பட்ட பீர்கள் தற்போது இரு மடங்காக விற்பனையாகி வருவதாக டாஸ்மாக் விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

    மேலும் குடிமகன்கள் கூலிங் பீரை கேட்டு வாங்கிச் செல்வதாகவும் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு நாள் ஒன்றுக்கு சராசரியாக 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பீர் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
    மேலும் மாவட்டம் முழுவதும் டாஸ்மார்க் கடைகளில் கூலிங் பீர் விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    3. திமுக பெண் கவுன்சிலர் தற்கொலை முயற்சி-பெரும் பரபரப்பு

    விருதுநகரில் அதிமுக பெண் கவுன்சிலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முயன்ற பெண் கவுன்சிலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விருதுநகர் நேருஜி நகரைச் சேர்ந்தவர் ஆஷா (வயது 33). இவர் அண்மையில் நடந்த விருதுநகர் நகராட்சி தேர்தலில் 5வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
    இந்த நிலையில் ஆஷா விருதுநகர் மேற்கு போலீசில் புகார் கூறியுள்ளார். அதில், எங்கள் பகுதியில் வசிக்கும் மேனகா (24), மாரீஸ்வரி (33), கலைச்செல்வி (43) ஆகியோர் சம்பவத்தன்று எனது வீட்டின் முன்பு நின்று கொண்டு என்னைப்பற்றி அவதூறாக பேசினர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த புகாரின் அடிப்படையில் மேற்கண்ட 3 பெண்கள் மீது விருதுநகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த தி‌.மு.க. பெண் கவுன்சிலர் ஆஷா தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட நிலையில் விருதுநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்‌. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    4.பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா-மிக பிரம்மாண்டமான ஊர்வலம்

    சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. 3-ம் நாளான நடந்த திருவிழாவில் காளீஸ்வரி மற்றும் கல்லூரி குழுமம் சார்பில் நடைபெற்ற திருவிழாவில் பிரம்மாண்டமான ஊர்வலம் நடைபெற்றது.

    இதில் கேரளாவின் பாரம்பரியமிக்க பஞ்ச வாத்தியங்கள் முழங்கியும், ஸ்ரீகிருஷ்ணா காளிங்க நர்த்தனம், மற்றும் அர்த்தநாரீஸ்வரர் நர்த்தனம், ஸ்ரீவிநாயகர், சம்கார பைரவி, பிரம்மாண்டமான சிலை ஊர்வலம் தனித்தனி வாகனங்களில் தத்ரூ பமான காட்சிகளாக சிறப்பு ஒலி-ஒளியுடன் கூடிய அழகு ரதங்கள் முன்செல்ல பத்திரகாளி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் நகர்வலம் 4 ரத வீதிகளில் நடந்தது.

    காளீஸ்வரி இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் டெக்னாலஜி மற்றும் காளீஸ்வரி கல்லூரி, காளீஸ்வரி குடும்பத்தினர் சார்பில் கல்லூரி செயலாளர் செல்வராஜன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சிவகாசியில் நடைபெற்ற இந்த பிரம்மாண்டமான ஊர்வலம் இரவு 8 மணிக்கு தொடங்கி 10 மணிக்கு நிறைவடைந்தது.
    அதனைத் தொடர்ந்து சிவகாசி இந்து நாடார் பெண்கள் மேல்நிலைப்ப ள்ளி மைதானத்தில் லட்சுமணன் சுருதி இன்னிசை நிகழ்ச்சியை திரளானோர் கண்டுகளித்தனர்.

    5.சாத்தூர் அருகே கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்து 21 க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம்.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒ.மேட்டுப்பட்டியில் திருவேங்கடத்தில் இருந்து சாத்தூர் வந்த எஸ் ஆர் நாயுடு ஞாபகார்த்த கல்லூரி பேருந்து மரத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் 21 மாணவிகள் படுகாயம்.அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    திருவேங்கடம் மற்றும் கரிசல்குளம் பகுதியிலிருந்து சுமார் 60 மாணவிகள் வந்த தனியார் கல்லூரி பேருந்தினை திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த கணபதி (63) என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த நிலையில் சாத்தூர் அருகே ஒ.மேட்டுப்பட்டி வந்து கொண்டிருந்த பொழுது பேருந்தின் மெயின் ஆக்சில் கட் ஆனதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த வேப்ப மரத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 21 க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்தனர். உடனடியாக காயமடைந்த மாணவிகளை மீட்டு அரசு மருத்துவமனை, மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதில் படுகாயமடைந்த 6 மாணவிகளை மதுரை அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்சாந்தார் தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளில் சிக்கிய வாகனத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஸ்பா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் மற்றும் சாத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி உள்ளிட்ட போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.

    கரிசல்குளம் சுப்புராஜ் மகள் கௌரி, ராமர் மகள் அமுதா (20) (17), ஆலடிபட்டி கனகராஜ் சுபத்ரா (21) ஏழாயிரம்பண்ணை பூபாளன் சுபலட்சுமி (22) செவல்பட்டி பாண்டி பானுஷா (20) கருப்பசாமி மகள் அழகுச் செல்வி (20), ஈஸ்வரன் மகள் முத்தீஸ்வரி(20), கோவிந்தன் மகள் சந்தனமாரி (20) திருவேங்கடம் முப்பிடாதி அனுஷா (19) புதுப்பட்டி செல்வராஜ் மகள் ரேணுகாதேவி (20) பழனிவேல்சாமி மகள் மகலட்சுமி (20) சங்குப்பட்டி அய்யனார் மகள் கவிதா(20) ஆண்டையாபுரம் குமார் மகன் ஜெயமாலா (20) ஆவடையாபுரம் முத்துமாரியப்பன் மகள் மாதவி (20) திருவேங்கடம் வெங்கட்ராமன் மகள் சாந்தாராணி (20) சங்குப் பட்டி தினேஷ் மனைவி பிரியா(22) சங்கரநாராயணன் மகள் மஞ்சுளா(22)ஆலம நாயக்கன்பட்டி நாகராஜ் மகள் சுவேதா (22) உன்னை உள்ளிட்ட 21 க்கும் மேற்பட்ட மாணவிகள் விபத்தில் காயம் அடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    6. அனுமதியின்றி மணல் அள்ளிய ஐந்து பேர் அதிரடி கைது லாரிகள் பொக்லைன் இயந்திரம் பறிமுதல்

    சாத்தூர் தாலுகா எம்.நாகலாபுரம் வைப்பாற்று பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக இருக்கன்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபாண்டியன் மற்றும் போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது வைப்பாற்று பகுதியில் அனுமதியின்றி ஜே.சி.பி. எந்்திரம் மூலம் மணல் அள்ளியது தெரியவந்தது. இதனையடுத்து அனுமதியின்றி மணல் அள்ளியதாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில், நாராயணபுரத்தை சேர்ந்த தங்கமுனியசாமி (வயது 32), மேலச்சிறுக்குளத்தை சேர்ந்த முத்தையா (20), முடித்தலை பகுதியை சேர்ந்த மாரீஸ்வரன் (27), குணசேகரன் (29), மீனாட்சிபுரத்தை சேர்ந்த வேல்முருகன் (23) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் மணல் அள்ள பயன்படுத்திய ஜே.சி.பி. எந்திரம் மற்றும் 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.

    7. பட்டாசு ஆலை வெடிவிபத்து-ஒருவர் கைது போலீஸ் அதிரடி

    சாத்தூர் அருகே கத்தாளம்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சோலைவிக்னேஷ் (வயது 26) என்ற தொழிலாளி உடல் சிதறி உயிரிழந்தார்.
    இந்த வெடி விபத்து குறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அம்மாபட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பட்டாசு ஆலை உரிமையாளர்களான சிவகாசி சிவகாமிபுரம் காலனியை சேர்ந்த பெரியகருப்பன், இவரது மகன்கள் ராமச்சந்திரன், சிதம்பரம், மணிகண்டன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சிதம்பரத்தை (வயது 30) போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    செய்தியாளர்:அ.மணிகண்டன், விருதுநகர்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி