விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பூமிநாத சுவாமி கோவிலில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.
திருச்சுழியில் சுமார் 1000 ஆண்டு பழமையான ஸ்ரீ பூமிநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஸ்ரீ திருமேனிநாதர் துணைமாலையம்மனாக சுவாமியும் அம்பாளும் அருள் பாலிக்கின்றனர். இந்தக் கோவிலில் கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உற்சவத் தேர்த் திருவிழா தொடங்கியது.
நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமியும் அம்பாளும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதையடுத்து கடந்த புதன்கிழமை (மார்ச் 16ஆம் தேதி ) மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மறுநாளான வியாழக்கிழமை திருத்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. தேரில் உலா வந்த தம்பதி சமேதரான திருமேனிநாதர் துணைமாலையம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள், பக்தியுடன் நேரில் கலந்து கொண்டு வழிபட்டனர்.
செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்.
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.