Home /local-news /

ஒரு காலத்துல மவுசு அதிகம்... அழியும் நிலையில் தென்னங்கீற்று பின்னும் தொழில்!!

ஒரு காலத்துல மவுசு அதிகம்... அழியும் நிலையில் தென்னங்கீற்று பின்னும் தொழில்!!

அழிவின்

அழிவின் விளிம்பில் பாரம்பரியமான தென்னங்கீற்று பின்னும் தொழில்

Virudhunagar District | பாரம்பரிய குடிசைத்தொழிலான தென்னங்கீற்று பின்னும் தொழில் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளதாகவும் நலிவடைந்து வருவதாகவும் இத்தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நலிவடைந்து வரும் இத்தொழிலை புத்துயிர் அளித்து மீட

மேலும் படிக்கவும் ...
    பாரம்பரிய குடிசைத்தொழிலான தென்னங்கீற்று பின்னும் தொழில் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளதாகவும் நலிவடைந்து வருவதாகவும் இத்தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் நலிவடைந்து வரும் இத்தொழிலை புத்துயிர் அளித்து மீட்டெடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நம் முன்னோர்கள் காலத்தில் கிராமங்களில் தென்னங்கீற்று மற்றும் பனை ஓலையினால் செய்யப்பட்ட கூரை வீடுகளிலேயே வாழ்ந்து வந்தனர். இதனால் கிராமப்புற பகுதிகளில் தென்னங்கீற்று பின்னும் சிறந்து விளங்கி வந்தது..

    தென்னங்கீற்று, பின்னும் தொழிலில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். நாளடைவில் நாகரீக வளர்ச்சி மற்றும் ஓட்டு வீடு மற்றும் காரை மாடிவீடுகள் மீது கிராம மக்களின் உள்ள மோகத்தால் தென்னங்கீற்று மற்றும் பனை ஓலை மூலம் வீடு கட்டும் ஆர்வத்தை மெல்ல மெல்ல குறைந்தது. இதனால் தென்னங்கீற்று பின்னும் தொழிலில் தற்போது அழிவின் விளிம்பில் இருந்து வருகிறது.

    தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் வெயிலின் வெப்பத்தை தணிப்பதற்காக குடியிருப்புவாசிகள் தென்னங்கீற்று மற்றும் தென்னந் தட்டிகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதனால் திருச்சுழி பகுதியில் தென்னங்கீற்று பின்னும் தொழில் தற்போது சூடு பிடித்து வருகிறது.இதனால் மிகுந்த ஆர்வத்துடன் இத்தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆர்டர்கள் குவித்தாலும் தென்னங்கீற்று உற்பத்தியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
    சந்தையில் ஒரு தென்னங்கீற்றின் விலை ரூபாய் 100 முதல் 160 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு நபர் சராசரியாக மூன்று அல்லது 5 தென்னங்கீற்று தட்டிகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து தொழிலில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு வரும் மகாலிங்கம் நம்மிடம் கூறியதாவது, கோடைகாலத்தில்பொதுமக்கள் மத்தியில் தென்னம்பட்டி தென்னங்கீற்றுக்கு நல்ல வரவேற்பு இருந்து வந்தது. இதனால் ஆர்டர்கள் குவிந்து வந்தன.
    தென்னங்கீற்று விலை, வாகன வாடகை அதிக அளவு இருப்பதால் இத்தொழிலில் சொற்ப வருமானம் கிடைத்து வருகிறது. பாரம்பரிய தொழிலான இத்தொழிலை விட்டு செல்லக் கூடாது என்பதற்காக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறேன்.

    மேலும் தொழிலை விரிவுபடுத்தவும் பலமுறை வங்கி வங்கிகளிடம் தொழில் கடன் கடன் கேட்டு இதுவரை வழங்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் எங்களைப் போன்ற குடிசைத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு கடனுதவி வழங்க ஏற்பாடு செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். உள்ளூர் வெளியூர் வாடிக்கையாளர்கள் அதிகளவில் ஆர்வத்துடன் வந்து வாங்கிச் செல்கின்றனர்.

    தற்போது மழை பெய்து வருவதால் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகிறேன் என்றார்.

    செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி