தை அமாவாசையையொட்டி
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் குண்டாற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். தர்ப்பணம் கொடுக்க புரோகிதர்கள் இல்லாததால் பொதுமக்களே முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து மோட்ச விளக்கு ஏற்றி வழிபட்டு சென்றனர்.
புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்:-
அருப்புக்கோட்டை அருகே உள்ள திருச்சுழி குண்டாற்றில் பொதுமக்கள் அதிகாலை முதலே புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவுகள், காய்கறிகள் ஆகிவற்றை படையலிட்டு திதி மற்றும் தர்ப்பணம் செய்து மோட்ச விளக்கேற்றி வழிபட்டு சென்றனர். அதன் பின், அருகே உள்ள விநாயகர் கோவிலில் நெய் விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர். மேலும், தை அமாவாசையையொட்டி திருச்சுழி குண்டாற்றில் தர்ப்பணம் செய்ய புரோகிதர்கள் இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
உள்ளூர் வெளியூர் பக்தர்கள் தரிசனம்:-
பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.