Home /local-news /

கொள்ளை, திருட்டு நடக்காத அதிசய கிராமம்.. செங்கமடை தர்ம முனிஸ்வரரிடம் வேண்டினால் திருடுபோன பொருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்..

கொள்ளை, திருட்டு நடக்காத அதிசய கிராமம்.. செங்கமடை தர்ம முனிஸ்வரரிடம் வேண்டினால் திருடுபோன பொருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்..

அருள்மிகு

அருள்மிகு தர்ம முனிஸ்வரர் சுவாமி

Virudhunagar | காவல் தெய்வமான அருள்மிகு தர்ம முனிஸ்வரர் காவல் காப்பதால் செங்கமடை கிராமத்தில் இதுவரை திருட்டு, கொள்ளை என எவ்வித குற்றங்களும் நடந்ததில்லை என கூறுகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் செங்கமடை கிராமத்தின் காவல் தெய்வமான அருள்மிகு தர்ம முனிஸ்வரர் சுவாமி அருளால் தலைமுறை தலைமுறையாக இக்கிராமத்தில் திருட்டு கொள்ளை என எவ்வித குற்றச் சம்பவங்களும் இதுவரை நடைபெற்றதில்லை என்றும் இக்கோயிலுக்கு வந்து சென்றால் திருடு போன பொருட்கள் உடனடியாக கிடைக்கும் எனவும் கிராம மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே செங்கமடை கிராமத்தில் காவல் தெய்வமான அருள்மிகு ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் சுவாமி ஆலயமானது  மிகவும் பழமையான கோயிலாகும். கிராமத்தில் சுமார் 10 வீடுகளிலேயே மக்கள் வசித்து வரும் மிகவும் சிறிய கிராமமாகும். கிராம மக்களின் முக்கிய தொழிலாக கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் இருந்து வருகிறது. கிராமத்தின் காவல் தெய்வமான மூலவர் தர்ம முனிஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்த துடியான தெய்வம் என்பதால் கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள இக்கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக எவ்வித திருட்டும், கொள்ளையும் நடைபெறவில்லை என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் கிராமத்தில் உள்ள வீடுகளில் கொள்ளையோ உடமைகள் திருட்டோ இதுவரை நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது. ஆடு, மாடு கோழிகள் உடமைகளை திருட முயற்சிக்கும் நபர்கள் கிராமத்திற்குள் உள்ளே வந்தாலும் தர்ம முனிஸ்வரர் மீதுள்ள அச்சத்தால் கொள்ளையர்கள் திரும்பிச் சென்று விடுவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் திருடுபோன கால்நடைகள் மற்றும் உடமைகளை உடனடியாக கண்டுபிடித்து தருமாறு முனீஸ்வரரிடம்  வந்து வேண்டினால் உடனடியாக காணாமல் போன பொருள்  கிடைக்கும் என கிராம மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் மகேஸ்வரன் கூறியதாவது, சிங்கமடை மற்றும் அதனை சுற்றியுள்ள 18 கிராமங்களில் மிகவும் துடியான தெய்வமாக செங்கமடை தர்ம முனிஸ்வரர் சுவாமி இருந்து வருகிறார்.

    கிராமத்தில் இதுவரை எவ்வித திருட்டும் கொள்ளையும் நடைபெற்றது இல்லை. இப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்களும் இக்கோவிலில் வந்து வழிபட்டு வருகின்றனர். திருடு போன அல்லது தொலைந்து போன பொருட்கள் உடனடியாக கிடைக்க வேண்டி இக்கோயிலில் வந்து வழிபட்டால் கிடைக்கும் என்ற ஐதீகம் சுற்றுவட்டார மக்கள் மத்தியில் பேசப்படுகிறது  என்றார்.

    செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி