Home /local-news /

கோயில், வீடுகள் இடித்து அகற்றம்!

கோயில், வீடுகள் இடித்து அகற்றம்!

கண்மாயில்

கண்மாயில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோவயில், வீடுகள் இடித்து அகற்றம்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கண்மாய் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோவில், வீடுகள் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட்டன.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கண்மாய் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோயில், வீடுகள் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட்டன. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கொண்டைநேரி கண்மாய் கிழக்கு பகுதியில் பல ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தன. அதில் பேட்டை ராமசாமி ராஜா கோயில் தெருவைச் சேர்ந்த பக்தர்கள் சித்தி விநாயகர் கோயில் கட்டி வழிபாடு செய்து வந்தனர். மேலும் அருகே மூன்று பேர் குடிசை வீடுகள் போட்டு ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வந்தனர். இதுகுறித்து பலமுறை பொதுப் பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றுமாறு நோட்டீஸ் விடுத்தும் அகற்றப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன் முன்னிலையில் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நில அளவைத்துறை போன்ற அதிகாரிகள் ஜேசிபி மூலம் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினார்கள். இந்து அமைப்பினர் மற்றும் அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தும் போலீஸ் பாதுகாப்புடன் முழுமையாக கோயில் இடிக்கப்பட்டது. வீடுகளும் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

    செய்தியாளர்:அ. மணிகண்டன் ,விருதுநகர்
    Published by:Karthick S
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி