Home /local-news /

தெர்மாகோல் பயன்படுத்தி இப்படி ஒரு வீடு கட்டி அசத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்..

தெர்மாகோல் பயன்படுத்தி இப்படி ஒரு வீடு கட்டி அசத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்..

தெர்மாகோல்

தெர்மாகோல் வீடு

Thermocol House | விருதுநகர் மாவட்டத்திலேயே முதன்முறையாக இயற்கை சீற்றங்கள் பேரிடர் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர்  தெர்மாகோல் காங்கிரீட் மாடி வீடு ஒன்றை கட்டி அசத்தியுள்ளார். இது குறித்த செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

மேலும் படிக்கவும் ...
    விருதுநகர் மாவட்டத்திலேயே முதன்முறையாக இயற்கை சீற்றங்கள் பேரிடர் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தெர்மாகோல் காங்கிரீட் மாடி வீடு ஒன்றை கட்டி அசத்தியுள்ளார். இது குறித்த செய்தித் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

    நம்மில் பெரும்பாலானோர் குடியிருக்கும் வீட்டிற்கு பெருமளவு தொகையை செலவு செய்து மாடல் மாடலாக பல்வேறு வகையான வீடுகள் கட்டி வருவதை பார்த்திருப்போம்.கேள்வி பட்டிருப்போம். ஆனால் வித்தியாசமாக செங்கல் மணல் அல்லாமல் வெறும் தெர்மாகோல் மூலமாக காங்கிரீட் வீடுகள் கட்டி அசத்தியுள்ளார் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள அம்மன்பட்டியை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் மணிகண்டன்.

    தனக்கு சொந்தமான நிலத்தில் கிராமத்தில் சொந்தமாக வீடு ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளார். அதிலும் வித்தியாசமாக புதுமையாக இருக்க வேண்டும் என என்பதற்காக சமூக வலை தளமான யூடியூப் மூலம் பல்வேறு வீடு கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்துள்ளார். அதன் முடிவில் தர்மகோல் காங்கிரீட் வீடு அமைப்பது குறித்து முடிவு செய்தார்.

    அதனைத் தொடர்ந்து தெர்மோகோல் கான்கிரீட் வீடு கட்டித்தரும் சென்னையைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனத்தை அணுகி ஒப்பந்தம் செய்து அதன்பின் நிறுவனத்தினர் பணியை தொடங்கிய 70 நாட்களிலேயே கட்டி முடித்தனர். இந்த தெர்மகோல் கான்கிரீட் வீடானது செங்கல், மணல், பில்லர்கள் இன்றி அமைக்கப்படுவது இதன் சிறப்பம்சமாகும்.

    மேலும் அந்நிறுவனத்தின் பொறியாளர்கள் ஒவ்வொரு தர்மங்கள் வீட்டின் ஆயுட்காலம் சுமார் 50 முதல் 60 ஆண்டுகள் வரை உழைக்க கூடியது என்றும் புயல் நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் இந்த வீட்டிற்கு எவ்வித சேதமும் ஏற்படாது என தெரிவிக்கின்றனர்.

    இவ்வீடு வெயில், மழை, குளிர் என மூன்று தட்பவெட்ப நிலையிலும் ஒரே குளிர்ச்சியான சீதா சமநிலையை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணலுக்கு பதிலாக எம்சாண்ட், பிசாண்ட் மற்றும் சிமெண்ட் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள வீடாகும்.

    இதுகுறித்து நம்மிடம் பேசிய வீட்டின் உரிமையாளர் அரசு பள்ளி ஆசிரியர் மணிகண்டன் கூறியதாவது:-\"சாதாரணமாக செங்கல் மணல் கொண்டு கட்டும் வீடுகள் கட்ட சுமார் ஆறு மாதங்களுக்கு மேல் ஆகும் ஆனால் தெர்மாகோல் கான்கிரீட் வீடு 70 நாட்களிலேயே கட்டி முடிக்கப்பட்டது.

    அதேபோல் செலவும் குறைவாக இருப்பதாலும் கட்டிடத்தின் உறுதி தன்மையை நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இயற்கை சீற்றங்கள் மற்றும் சீதோஷண நிலைக்கு உகந்தவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலேயே சுற்றுவட்டார பகுதியில் தர்மாகோல் மூலம் கான்கிரீட் வீடு கட்டப்படுவது இதுவே முதல் முறையாகும். இதனால் இப்பகுதி மக்கள் இந்த வீட்டை பெரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்\" என்றார்.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி