Home /local-news /

தை அமாவாசை - சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

தை அமாவாசை - சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோயிலில் தை அமாவாசையையொட்டி நேற்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

    சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோயிலில் தை அமாவாசையையொட்டி இன்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    அலைமோதிய பக்தர்கள் கூட்டம்:-

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோயிலுக்கு பிரதோஷம் மற்றும் தை அமாவாசையையொட்டி கடந்த சனிக்கிழமை முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதே நேரம், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் , தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், தை அமாவாசை தினமான நேற்று சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    அதிகாலையிலேயே சுந்தர மகாலிங்கம்,சந்தன மகாலிங்கம் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீர், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    பக்தர்கள் சாமி தரிசனம்:-

    இதைத்தொடர்ந்து, சுந்தர, சந்தன மகாலிங்கம் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. பாதுகாப்பு பணியில் போலீசார் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

    செய்தியாளர்:அ.மணிகண்டன்,
    விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி