விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள காரியாபட்டி தேசிய நெடுஞ்சாலையில் காகித அட்டைலோடு ஏற்றி வந்த சரக்கு வாகனம் திடீரென தீ பிடித்து எரிந்து விபத்தில், அதிஷ்டவசமாக சரக்கு வாகன டிரைவர் உயிர் தப்பினார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை காரியாபட்டி புறவழிச்சாலையில் தூத்துக்குடி (டிரைவர்) மகாராஜா டாட்டா ஏசியில் அட்டை லோடு ஏற்றிக்கொண்டு தூத்துக்குடியிலிருந்து மதுரையை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில், தெற்கிலிருந்து வடக்கு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது டாஸ்மாக் கடை பகுதியை கடக்கும் பொழுது, திடீரென வண்டியின் கீழ் பகுதியிலிருந்து புகை வருவதை உணர்ந்தார். இதனால், வாகனத்தை நிறுத்தி இறங்கினார். வாகனத்தின் கீழ் பகுதியில் இருந்து வந்த புகையை மண்ணை போட்டு அணைக்க முயற்சித்துள்ளார். அப்போது வாகனம் திடீரென தீப்பற்றியது.
இதனால், வாகனத்தின் பின்புறம் ஏற்றப்பட்டிருந்த அட்டை லோடு மற்றும் வாகன டயர்களும் முழுவதும் எரிந்து சேதம் ஆகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காரியாபட்டி போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.