Home /local-news /

டாஸ்மாக் ஊழியரை பாம்பு கடித்ததால் பரபரப்பு - மது பிரியர்கள் பீதி

டாஸ்மாக் ஊழியரை பாம்பு கடித்ததால் பரபரப்பு - மது பிரியர்கள் பீதி

டாஸ்மாக்

டாஸ்மாக் ஊழியரை பாம்பு கடித்ததால் பரபரப்பு-மது பிரியர்கள் பீதி...

Virudhunagar District | விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வழக்கம்போல் டாஸ்மாக் கடையில் பணியில் இருந்த போது, சூப்பர்வைசர் மாரிமுத்துவை பாம்பு கடித்ததாக தெரிய வருகிறது.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் பணியில் இருந்த ஊழியரை பாம்பு கடித்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்று திரும்பியுள்ளார். இச்சம்பவம் குடிமகன்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    சாத்தூர் அருகிலுள்ள நத்தத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து, சாத்தூர் - கோவில்பட்டி பிரதான சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் டாஸ்மாக் கடையில் பணியில் இருந்த போது, சூப்பர்வைசர் மாரிமுத்துவை பாம்பு கடித்ததாக தெரிய வருகிறது. உடனே அங்கு பணியில் இருந்த டாஸ்மாக் ஊழியர்கள் அவரை சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் சிகிச்சைக்குப்பின் குணமடைந்து வீடு திரும்பினார்.

    பின்னர் சாத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் டாஸ்மாக் கடையில் உள்ள மது பாட்டில் பெட்டிகள் மற்றும் மதுபாட்டில்கள் அனைத்தையும் வெளியேற்றி தேடிப் பார்த்தும் பாம்பு கிடைக்கவில்லை. தீயணைப்புத்துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    மெயின் ரோட்டில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக் கடை சூப்பர்வைசரை பாம்பு கடித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    செய்தியாளர்: அ.மணிகண்டன், விருதுநகர்
    Published by:Vijay R
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி